Saturday 26 October, 2019

நீர்த்த நீதி

இல்லையென்றே னில்லை யென்பராம்,
இவரவர் உரைத்ததே 
மெய்யு மென்பராம்,

நீதியாம் உண்மையாம்,
சொல்வதுவும் கேட்பதும் 
மதிகெட்ட பெண்ணாகினால்,
உயிர்க்கூசா புளுவலும், 
தொடர்ந்தே சாத்தியமாம்,

ஏண்டுகொள்ளெனவே குழுவாய்க் கூறி
'பின்வந்தி'ன் சாரணைக்கு ஒத்தூதும்
ஒருகைப்பிடி சாரணமார் சேர்ந்ததுவாம்,
பலதிங்கள் மனத்திற்குள், 
மாறா அழுத்தம் ஏற்றினராம்,
மீண்டும் மீண்டும் பிண்டமாய் 
மாற்றும் வழியனைத்தும், 
நிற்காமல் வழங்கினராம்!

மதிமக்கி மெய்வருந்தி, 
இரவு- பகலாகி, பகல்- விடியலாகி, 
சுழலும் சக்கரம் வயதைத் தடிமனாக்கி,
உட்சக்தி வற்றி புள்ளிமட்டும் 
தேடித் தேடி...

Thursday 24 October, 2019

ச்...இவன்

ம்ச்...
இவன் ...
ஓர் நல்லவனாம்!

ம்ச்...
இவன்
கருணையில் இதயம் 
ச்...சிவந்தனனாம்! 

அளப்பரிய அன்பை,
அள்ளித் தெளித்து 

நம் கண்கள் குளமாக்கிக்
குடி கன்னந்தடிச் சிவன்,

அப்பனாய் நின்று 
நாடகம் நடத்திட்டு,

அண்டத்தின் சுடராய் 
ஒளிருஞ் சிவனிவனாம்.

Saturday 28 September, 2019

வெற்று விவசாயமோ?

வாள் வாழ்கவென,
விழி வீழ்ந்து,
வயலுக்குகந்த வரப்பளந்த,
வெற்றிலை வெறுமையாய்
விவசாயக்கேணி வீணாகுமோ?

Friday 21 November, 2014

எழுத்து - மூன்று சேத்துக்கட்டு!

அழகு எடுத்து; அன்பு கொண்டு,
அறிவு வளர்த்து; அறம் செய்து,

கல்வி பயின்று; உவமை புனைத்து,
கவிதை எழுதி; பாடல் அமைத்து,

அமுது வழியும்; தமிழ் உருக்கி,
அகம் நிறைத்து; வீரம் சொலல்...

உண்மை விளங்க, மிக்க நன்று!
*** 'இந்தா' 'கன்னு' 'இன்னா' 'சொல்ற'? *****

Friday 3 October, 2014

இவ்வம்மா-செப்டம்பர் 2014!

அருப்போன்ற பிம்பங்கொட்டி விளக்கி;
கருச்சிறையினின் வந்ததொத்துப் பாசவொலியிட்டு;
உருக்கொண்டழுது உச்சுகொட்டினாலும்;
இருச்சிறையினமர்ந்து எண்ணும் மரபை மாற்றவியலா!

Wednesday 1 October, 2014

இறந்த எதிர்காலம்!

பேசிய வார்த்தைகளுக்குக் காணிக்கையாக்கினேன்,
என் நித்திரையை!
சிந்திய சில நித்திரைத்துளிகளில் கலைத்தெழுந்தேன்,
என் உறக்கத்தை!
அபத்தமாக்கிய தருணங்கொண்டு கலைக்க முயற்சித்தேன்,
என் தூக்கத்தை!
வற்றிய சிந்தனையலைகளையெடுத்து தூர்வாரினேன்,
என் இறப்பிறப்பை!

Saturday 14 December, 2013

பணிப் பயணங்கள்!

வந்து நின்று கூறியதும்,
சென்று நின்று உரைத்ததுவும்,
சமயங்க ளெல்லாம் மெய்மறந்ததுவும்,

சின்னக் சின்னக் குழந்தைகளுக்கு
நேரத்தைப் பகிர்ந் துடுத்தி,
ஒய்யாரச் சிலிர்ப் பழகைப்
பார்த்து பார்த்து ரசித்ததுவும்,
வந்தமர்ந்து மறித்ததம் சோகங்களை
பகிர்ந் தெடுத்துக் கேட்டவைகளும்.

நம்பிக்கையின் நாணய மெனவர்தம்
மனமெண்ணும் வகைக்குவாழ எம்
மனந்தன்னை மெருகெடுத்திய,

செத்துப்போன மாதங்களில்,
வாழ்க்கை அர்த்தம் கொடுக்கும்
செதுக்கியடுக்கிய நிம்மதிச்செங்கற்கள்,
எம் பணிப் பயணத்துளிகள்!!